ரூ.200 கோடி கிளப்பில் மோகன்லால்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ள மலையாள படம், ‘திரிஷ்யம் 3’. முன்னதாக இப்படத்தின் 2 பாகங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. தற்போது வெளியாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ படம், கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, இப்படம் முதல் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை கடந்தது.

இதற்கு முன்பு மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ என்ற படம் ரூ.266 கோடியும், ‘துடரும்’ என்ற படம் ரூ.234 கோடியும் வசூலித்து, ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தன. இதையடுத்து வெளியான 3வது பாகம், முந்தைய பாகங்களின் வசூலை முறியடித்துள்ளது. ‘லோகா: சாப்டர் 1 சந்திரா’ என்ற படம் ரூ.303 கோடியும், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற படம் ரூ.242 கோடியும், ‘வாழ 2’ என்ற படம் ரூ.234 கோடியும் வசூலித்துள்ளன. இதில் ரூ.200 கோடி கிளப்பில் மோகன்லாலின் 3 மலையாள படங்கள் இணைந்துள்ளன.

Related Stories: