சென்னை: 1970களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கிறார். குதிரைப் பந்தய உலகை மையமாக வைத்து நேர்மையும் உயர்ந்த லட்சியமும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டமாக இந்த படம் உருவாகிறது. இயக்குனர் ஹெச்.வினோத்திடம் இணை இயக்குனராக இருந்த ஹர்ஷவரதன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் துவக்க விழாவில் ரவி மோகன், ஹெச்.வினோத் கலந்துகொண்டனர். 1970களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக பட யூனிட்டார் தெரிவித்தனர். ஹீரோயின், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
