அன்னாசி ஸ்வீட் பாயேஷ்

எப்படிச் செய்வது?நான்ஸ்டிக் பேனில் பாலைச் சேர்த்து, பாதி
அளவிற்கு சுண்டும் வரை மிதமானச் சூட்டில் சூடு செய்யவும். வெது வெதுப்பான 1
டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, சுண்டியப் பாலில்
சேர்க்கவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூளைச் சேர்த்து கலக்கவும். தோல்
சீவி நறுக்கிய அன்னாசிப் பழத்துண்டுகளை மிக்சியில் போட்டு நன்கு மைய
அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் நெய் சேர்த்து பொடியாக
நறுக்கிய பாதாம், பிஸ்தாவைச் சேர்த்து வதக்கி, அரைத்த அன்னாசி விழுதைச்
சேர்த்து சிம்மில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். பாலின் சூடும்,
அன்னாசி விழுதின் சூடும் ஆறியதும் இரண்டையும் ஒன்றாக கலந்து ஃப்ரிட்ஜில்
வைத்து ஜில்லென்று பரிமாறவும்.குறிப்பு: சூடானப் பாலில் அன்னாசி
விழுதைச் சேர்த்தால், அன்னாசியிலுள்ள அமிலம் பாலைத் திரியச் செய்து விடும்.
ஆகவே பால் ஆறியதும் அன்னாசி விழுதைச் சேர்க்கவும்.

The post அன்னாசி ஸ்வீட் பாயேஷ் appeared first on Dinakaran.

Related Stories: