மீண்டும் தமிழுக்கு வந்த பாக்யஸ்ரீ

இந்தியில் ‘யாரியன் 2’, ‘சந்து சாம்பியன்’, தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’, ‘லெனின்’, தமிழில் ‘காந்தா’ ஆகிய படங்களில் நடித்தவர், பாக்யஸ்ரீ போர்ஸ். தற்போது ‘சேயோன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து ஹிட்டான ’தாய் கிழவி’ என்ற படத்தை எழுதி இயக்கிய சிவகுமார் முருகேசன், அடுத்து ‘சேயோன்’ என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. காமெடி வேடத்தில் பாலசரவணன் நடிக்கிறார். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். வரும் அக்டோபரில் படம் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் கையில் அரிவாளும், பாக்யஸ்ரீ போர்ஸ் கையில் மயிலிறகும் இருப்பது போன்ற போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Stories: