நீதிமன்ற திரில்லர் கதை கொண்ட ‘சிஸ்டம்’ என்ற படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். பவேஜா ஸ்டுடியோஸ் சார்பில் பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா, ஸ்மிதா பாலிகா தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா, அக்ஷத் கில்தியல் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா, அஷுதோஷ் கோவாரிகரின், பிரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே, சயந்தீப் குப்தா நடித்துள்ளனர்.
வரும் 22ம் தேதி முதல் இந்தியா உள்பட 240க்கும் மேற்பட்ட நாடுகளில், பல்வேறு மொழிகளில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. அதிகாரமும், செல்வாக்கும் நிறைந்த இவ்வுலகில், நீதி மற்றும் உண்மைக்காக போராடும் பெண்களை பற்றி பேசும் இப்படத்தில், ெபாது வழக்கறிஞர் சோனாக்ஷி சின்ஹாவும், எளிய பின்னணி கொண்ட நீதிமன்ற ஸ்டெனோகிராபர் ஜோதிகாவும் ஒரு விஷயத்துக்காக ஒன்றிணைந்து போராடுகின்றனர். அவர்களுக்கான நீதி கிடைத்ததா என்பது மீதி கதை.
