சாரா அர்ஜுனை தொடர்ந்து நோரா பதேஹிடம் 71 வயது நடிகர் அத்துமீறல்

 

மும்பை: சாரா அர்ஜுனை தொடர்ந்து கவர்ச்சி நடிகை நோரா பதேஹிடம் அத்துமீறி நடந்ததாக பாலிவுட் நடிகர் ராகேஷ் பேடி மீது புகார் எழுந்துள்ளது. விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சிறுமியாக நடித்தவர் சாரா அர்ஜுன். இப்போது அவருக்கு 20 வயதாகிறது. ‘துரந்தர்’ இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த பட விழாவில் 71 வயதான இந்தி நடிகர் ராகேஷ் பேடி, சாரா அர்ஜுனை கட்டியணைத்து சரமாரி முதுகில் முத்தமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ராஷே பேடி, ‘சாரா தனக்கு மகள் போன்றவர்’ என்றார். இந்நிலையில் புதிய படத்தில் கவர்ச்சி நடிகை நோரா பதேஹி உடன் சேர்ந்து ராகேஷ் பேடி நடித்திருக்கிறார்.

இது குறித்து ராகேஷ் பேடி சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘‘நான் இப்போது யாருடன் டான்ஸ் ஆடினேன் தெரியுமா? இந்தியாவின் பிரபலமான கவர்ச்சி கன்னி நோராவுடன்தான். அவரது அழகு என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டது’’ என்றார். படப்பிடிப்பு தளத்தில் நோராவை அவர் இடுப்பில் கை வைத்து சீண்டலில் ஈடுபட்டதாக பட யூனிட்டை சேர்ந்த சிலர் கூறியிருக்கிறார்கள். அப்போது நோராவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதாகவும் அவர் ராகேஷ் பேடி சீனியர் நடிகர் என்பதால் அமைதி காத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: