ஸ்ரீலீலாவின் ‘பகீர்’ அனுபவம்: பைத்தியம் பிடித்தது போல் ஆனது

ஐதராபாத்: நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றார். இந்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: திரைப்படத்துக்காக நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்றுக்கொள்வதையும் சமமாக நேசிக்கிறேன். பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும், கடினமான மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்தது குறித்து ஆச்சரியப்பட்டு பேசுகின்றனர். ஒரே நேரத்தில் நடிக்கவும், மருத்துவம் படிக்கவும் நேரம் ஒதுக்குவது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மன உறுதியும், பொறுமையும் மிகவும் அவசியம். பல நேரங்களில் ஒரு விஷயத்தில் இருந்து இன்னொரு விஷயத்துக்கு மனதை மாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். நீண்ட நேர படப்பிடிப்புக்கு பிறகு இரவில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். சில நாட்களில், ‘எனக்கு என்னதான் நடக்கிறது?’ என்று பைத்தியம் பிடிப்பது போல் தோன்றும். எனினும், படிப்பில் சாதித்த பிறகு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்.

Related Stories: