ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த ஈகோ ராமன்

 

சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ள (மறைந்த) ரோபோ சங்கர், ஹீரோவாக நடித்த முதலும் கடைசியுமான படம், ‘ஈகோ ராமன்’. சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ், லதா நடித்துள்ளனர். அஸ்ருதா புரொடக்‌ஷன்ஸ் சுதா.ஜி தயாரிக்கிறார். கணேசன் நாச்சிமுத்து எழுதி இயக்கி இருக்கிறார்.

ரெய்மன் ராட்ரிக்ஸ் பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். கோவை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இம்மாத இறுதியில் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் படத்தை வெளியிடுகிறது. ஆசிரியருக்கும், அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதும் மாணவனுக்கும், பிரச்னை ஏற்படுகிறது. பிறகு வென்றது ஆசிரியரா, மாணவனா என்பது படத்தின் கதை.

Related Stories: