சென்னை: பிரியா பவானி சங்கர் கூறியது: அழகு என்பதன் வரையறை காலத்துக்கு காலம் மாறுகிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மைக்கூட உனக்கு இவ்வளவு போதும் என்பார்கள், சில நேரம் அது நம் நல்லதுக்காகக்கூட இருக்கலாம். ஆனால், நமக்கு என்ன சரி, எது தேவை என நாம்தான் முடிவு செய்ய வேண்டும். திருப்தி ஆவது வேறு செட்டில் ஆவது வேறு. இப்படி இருந்தால்தான் அழகு, இதுதான் அழகு எனச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அங்குதான் தன்னம்பிக்கை தேவை என நினைக்கிறேன்.
இதில் இன்ப்ளூயன்சர் தாக்கம் என்பது அதிகரித்துள்ளது. இப்போது இது சார்ந்த விளம்பரங்கள்கூட வருகிறது. அதே சமயத்தில், பார்வையாளர்களுக்கும் அது புரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இதை வாங்குங்கள் என்று சொன்னால் வாங்கி இருக்கலாம். இப்போது அந்த மனநிலை மாறிவிட்டது.
பணம் பெற்றுத்தான் அவர்கள் பேசுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, இப்போது ஒரு தரமான பொருளை விளம்பரம் செய்ய மட்டுமே இன்ப்ளூயன்சர்கள் தேவை. அது விற்பனையாக, அந்தப் பொருளின் தரம்தான் முதன்மையாக இருக்கிறது என்றார்.
