சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப இணையவழி பயிற்சி-4 மாவட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்பு

திருச்சி : சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. இதில் 4 மாவட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.திருச்சி மாவட்டத்தில் 100 ஹெக்டருக்கும் மேல் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சாகுபடியின்போது ஊட்டச்சத்து குறைபாடு, பூச்சி மற்றும் நோய் பிரச்னைகளால் சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் முறையான தொழில்நுட்பத்தை அறிந்து சாகுபடியை சிறப்பாக செய்திட வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மித்ரா பவுண்டேசன் இணைந்து எலுமிச்சை சாகுபடி எனும் தலைப்பில் இணையவழி தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு தமிழ்நாடு வேளண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ஜவஹர்லால் தலைமை வகித்தார். இதனை தொடர்ந்து எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், சங்கரன்கோவில் பேராசிரியர் மற்றும் தலைவர் ரிச்சர்டு கென்னடி எலுமிச்சை ரகங்கள் மற்றும் சாகுபடி குறித்த பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். பிறகு உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி முறைகள் பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் எடுத்துரைத்தார்.மேலும் வேளண் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.கே.எம் எலுமிச்சை ரகத்தின் சிறப்பு பற்றி உதவிப்பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் விளக்கினார். தொடர்ந்து மண்ணியல் துறை உதவிப்பேராசிரியர் தனுஷ்கோடி எலுமிச்சை சாகுபடியில் இட வேண்டிய உரங்கள் மற்றும் நுண்ணூட்டம் இடுவது குறித்தும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஐ.ஐ.எச்ஆர் சிட்ரஸ் ஸ்பெசல் தெளிக்கும் முறைகள் பற்றியும் விளக்கமளித்தார்.எலுமிச்சையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுனர் ஷீபா ஜாஸ்மின் விளக்கினார். மேலும் உணவியல் துறை உதவிப்பேராசிரியர் கீதா எலுமிச்சையில் எவ்வாறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சந்தைபடுத்துவது குத்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் திருச்சி, கரூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களிலிருந்து முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்….

The post சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப இணையவழி பயிற்சி-4 மாவட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: