சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளார்.

2019 மற்றும் 2021 க்கு இடையில் இந்தியாவில் காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் 13.13 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, அதிகபட்ச வழக்குகள் மத்தியப் பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல முன்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிறுமிகள் அதிகளவு காணாமல் போவதாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும். காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த திருச்சி மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் காணாமல் போன சிறுமிகளை மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

 

The post சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: