சென்னை: கடந்த 2019ல் வெளியான ‘காளிதாஸ்’ என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘கேம் ப்ளே’. இதன் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். வித்தியாசமான திரைக்கதையுடன் சிவநேசன் எழுதி இயக்குகிறார். பைனான்ஸியல் கிரைம் கதை ெகாண்ட இது, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகிறது.
‘Exit is an Illusion’ என்ற டேக்லைனுடன் வெளியான பர்ஸ்ட் லுக், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதில் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘ஹார்ட்பீட்’ சாருகேஷ், ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷன், சார்லி நடிக்கின்றனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். புவன் சீனிவாசன் எடிட்டிங் செய்கிறார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது.
