×

தயாரிப்பு நிறுவனத்துடன் ரிஷப் ஷெட்டி மோதல்: சம்பள பிரச்னை காரணமா?

பெங்களூரு: ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’, ‘சலார்’ ஆகிய பான் இந்தியா படங்களை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இதில் ‘காந்தாரா’ படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியால், முன்கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்தார். முதல் பாகம் ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்டு, பிறகு ரூ.450 கோடி வசூலித்தது. ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் ரூ.125 கோடியில் உருவாக்கப்பட்டு, பிறகு ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், ஹோம்பாலே பிலிம்ஸை தனது இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை ரிஷப் ஷெட்டி நிறுத்தியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்துக்கும், ரிஷப் ஷெட்டிக் கும் வியாபார ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் லாபத்தில் பங்கு என்று ரிஷப் ஷெட்டியிடம் ஹோம்பாலே பிலிம்ஸ் பேசியிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனம், அவரது பங்கை தர மறுப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதையொட்டியே அந்தநிறுவனத்துடன் ரிஷப் ஷெட்டிக்கு மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Rishabh Shetty ,Bengaluru ,Homebalay Films ,
× RELATED சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி