×

யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து டீசர் வெளியீடு

சென்னை: யோகி பாபு நடிக்கும் 300வது படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. இதன் டீசரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். தேவ் சினிமாஸ் பி.லிட் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி.எஸ் தயாரிக்க, ரா.ராஜ்மோகன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியான பின்பு, பழைய வண்டி வாங்கி விற்பதில் நடக்கும் மோசடிகள் மக்களுக்கு துல்லியமாக தெரிய வரும் என்று படக்குழு தெரிவித்தது. முக்கிய வேடங்களில் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், ‘அயலி’ மதன், சுப்பிரமணியம் சிவா, லெனின் பாரதி, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார் நடித்துள்ளனர். ‘தண்டகாரண்யம்’ பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய, ‘அமரன்’ சேகர் அரங்கம் அமைக்க, ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அளிக்க, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். எல்.சுந்தரபாண்டி இணை தயாரிப்பு செய்ய, எம்.ஆர்.அருண் சந்தர் வசனம் எழுதியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது.

Tags : Chennai ,Yogi Babu ,Lokesh Kanagaraj ,Krithika Thangapandi.S ,Dev Cinemas P.Lit ,Ra. Rajmohan ,Anamika Mahi ,Kali Venkat ,Aruldas ,Ayali' Madhan ,Subramaniam Siva ,Lenin Bharathi ,Myna Nandini ,Soundarya ,
× RELATED சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி