ஐதராபாத்: ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, பார்த்திபன், ராசி கன்னா நடிப்பில் வெளியான தெலுங்கு படம், ‘உஸ்தாத் பகத் சிங்’. முன்னதாக நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசும்போது, படக்குழுவினர் அவருக்கு பின்னால் நின்றிருந்தனர். அப்போது ஸ்ரீலீலா, தனக்கு பின்னால் நின்றிருந்த தெலுங்கு நடிகர் மகேஷை சட்டென்று திரும்பி பார்த்தார். அதற்கு ஸ்ரீலீலாவை பார்த்து மகேஷ் சிரித்தார். ஆனால், ஸ்ரீலீலா எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவரை புறக்கணித்திருந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
இதையடுத்து நெட்டிசன்கள் பலர் தாறுமாறான கமென்டுகளை வெளியிட்டு வந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள ஸ்ரீலீலா, ‘அந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மகேஷிடம் எனது மொபைல் போனை கொடுத்து வைத்துக்கொள்ள சொன்னேன். மேடைக்கு சென்றபோது, மகேஷ் எனக்கு பின்னால் நின்றிருந்தார். பவன் கல்யாண் சார் பேசும்போது பின்னால் இருந்து ஏதோ ஒரு சத்தம் வந்தது. எனது போனில் இருந்துதான் சத்தம் வருகிறதா என்று திரும்பி பார்த்தேன். அதற்குள் சோஷியல் மீடியாவில் தங்களுக்கு தோன்றிய கருத்துகளை எல்லாம் பதிவிட்டு வருகின்றனர்’ என்றார்.
