விஜய் சேதுபதியிடம், அவரது படங்களில் மிகவும் பிடித்த அறிமுக காட்சி எது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் நடித்த `விக்ரம் வேதா’ என்ற படத்தில் எனது அறிமுக காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை படமாக்கிய பிறகு இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி எனக்கு ஒளிபரப்பினார்கள். ‘எனக்கான பில்டப் ஓவராக இருக்கிறது. இதை சிறிதளவு குறைத்துவிடுங்கள். விஜய், அஜித் குமார் ரேஞ்சுக்கு பில்டப் இருக்கிறது. இக்காட்சியில் நான் நடித்திருக்கும்போது, அதை பார்க்க ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்குமா?’ என்று கேட்டேன். அதை ஏற்க மறுத்த புஷ்கர், காயத்ரி தம்பதி, இக்காட்சியை மக்கள் வரவேற்பார்கள் என்று பெரிதும் நம்பினார்கள்.
பிறகு படம் ரிலீசானபோது அதுதான் நடந்தது. இன்னொரு படம் `விக்ரம்’. இதற்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அதீத நம்பிக்கைதான் காரணம். நான் தொப்பையுடன் காணப்படுவேன். என்னைச்சுற்றி டயர் இருப்பது போல் என் வயிறு இருக்கிறது. தியேட்டரில் ரசிகர்கள் என்னை கலாய்த்துவிடுவார்கள் என்று பயந்தேன். நான் லோகேஷ் கனகராஜிடம் பேசியபோது, அக்காட்சியை கிராபிக்ஸில் மாற்றுவார் என்று நினைத்தேன். ஆனால், அக்காட்சியை பார்த்தவுடனே அனைவருக்கும் பிடித்துவிட்டது. எனவே, அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. `ஆண்டவன் கட்டளை’, `விடுதலை’ ஆகிய படங்களிலும் எனது அறிமுக காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார்.
