- அர்ச்சனா ரவி
- சென்னை
- ஈடன்
- ஜென் ஸ்டுடியோஸ்
- அசோக் குமார் கலைவாணி
- சுதர்ஷன் கோவிந்த்
- ஒய்.ஜி.மகேந்திரன்
- ஸ்நேஹா சக்தி
- டாக்டர்
- வித்யா
- பிரதோஷ்
- ராஜா பட்டாச்சார்ஜி
- அஷ்வின் ஹேமந்த்
- கு. கார்த்திக்
- எஸ்.ஏ. நாகார்ஜுனா
- வர்ணாலய ஜகதீசன்
- விஜய ராணி
சென்னை: ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ், ஈடன் தயாரித்துள்ள ‘நீ பாரெவர்’ என்ற படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. அசோக்குமார் கலைவாணி எழுதி இயக்கியுள்ளார். சுதர்சன் கோவிந்த், ‘மிஸ் சவுத் இந்தியா’ அர்ச்சனா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சினேகா சக்தி, டாக்டர் வித்யா, பிரதோஷ் நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் ஹேமந்த் இசை அமைத்துள்ளார். கு.கார்த்திக் பாடல்கள் எழுத, எஸ்.ஏ.நாகார்ஜூன் எடிட்டிங் செய்துள்ளார். வர்ணாலயா ஜெகதீசன் அரங்கம் அமைக்க, விஜயராணி நடனப் பயிற்சி அளித்துள்ளார்.
படம் குறித்து சுதர்சன் கோவிந்த் கூறுகையில், ‘பல வருடங்களாக எதிர்பார்த்த வாய்ப்பு இப்படத்தின் மூலம் கிடைத்தது. தயாரிப்பாளர் நேரடியாக அழைத்தபோது, யாரோ என்னை கலாய்ப்பதாகவே நினைத்தேன். பிறகு அது நிஜமான வாய்ப்பாக மாறியது. எனது வீடியோவை பார்த்து தேர்வு செய்தனர்’ என்றார். பிறகு அர்ச்சனா ரவி கூறும்போது, ‘கதையை கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சிறப்பான கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி’ என்றார். டேட்டிங் செயலியை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.
