- ஸ்ரீ செந்தில்
- பாரத்
- அஜய் கார்த்திக்
- பிரகாஷ் ராஜ்
- ஆது கலாம் கிஷோர்
- சுரேஷ் மேனன்
- ஆனந்த்நாக்
- பவானிஸ்ரீ
- அபர்ணதி
- ராஜா ரவிந்தர்
- டி.எம். கார்த்திக்
- சிங்கம்
- ஜெயவெல்
- சங்கீதா
- சாம் சிஎஸ்
கடந்த 2019ல் பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’ என்ற படத்தை இயக்கிய ஸ்ரீசெந்தில், தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானிஸ்ரீ, அபர்ணதி, ராஜா ரவீந்தர், டி.எம்.கார்த்திக், ‘சிங்கம்’ ஜெயவேல் நடித்துள்ளனர். ‘பூவே உனக்காக’ சங்கீதா ரீ-என்ட்ரி ஆகிறார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். முன்னதாக இப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 3ம் தேதி ‘லெஜண்ட்’ சரவணின் ‘லீடர்’ படம் ரிலீசாகிறது. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் திரைக்கு வருகிறது.
