புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் சிதலமடைந்த விவகாரம்: 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!

சென்னை: சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களில் தொட்டாலே சிமெண்ட் உதிரும் காட்சிகள் வைரலாக பரவியது. மேலும், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. அதையடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பேசுகையில்’ அப்போது, “தொட்டால் சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டத்தை அதிமுக கட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கட்டிமுடித்த அனைத்து கட்டங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னை புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்டடம் கட்டிமுடித்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி ஐ.ஐ.டி. குழுவுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது….

The post புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் சிதலமடைந்த விவகாரம்: 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..! appeared first on Dinakaran.

Related Stories: