2 மற்றும் 3ம் கட்ட மூக்கு வழி தடுப்பு மருந்து பரிசோதனைக்கு அனுமதி

புதுடெல்லி:  ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து,  இந்தியாவிலேயே முதல் முறையாக மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்துள்ள நிலையில், 2, 3ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பயோடெக்னாலஜி துறை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களிடம் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2, 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்த ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. …

The post 2 மற்றும் 3ம் கட்ட மூக்கு வழி தடுப்பு மருந்து பரிசோதனைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: