சமந்தாவின் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்

கடந்த 2021ல் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற இந்தி வெப்தொடர் படப்பிடிப்பில் தொடங்கிய சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோரு நட்பு, பிறகு காதலாக மலர்ந்து, சமீபத்தில் திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில் சமந்தா அளித்திருக்கும் பேட்டியில், `விவாகரத்து என்ற சூழ்நிலையை சந்தித்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கி பழகுவதோ இனிமேல் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். இதுபோன்ற மனநிலையில் இருந்தபோதுதான் ராஜ் நிடிமோருவை சந்தித்தேன்.

இப்போது அவர் என் வாழ்க்கையில் நிறைந்திருப்பதால், என்னை ஒரு சிறந்த மனுஷியாக உணர்கிறேன். அந்த அன்பையும், நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ராஜ் நிடிமோருவுடனான உறவின் காரணமாக அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனக்குள் ஏற்பட்ட நேர்மறையான மாற்றத்தை எனது தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டனர். ‘மா இண்டி பங்காரம்’ என்ற பான் இந்தியா படத்தை தயாரித்து நடித்து வருகிறேன். இப்படம் உருவாக ராஜ் நிடிமோரு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். நந்தினி ரெட்டி இயக்குகிறார்’ என்றார்.

Related Stories: