தேசிய விருது பெற்ற ‘லிட்டில் விங்ஸ்’: பிப்.27ம் தேதி யூடியூபில் வெளியாகிறது

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் குறும்படம், ‘லிட்டில் விங்ஸ்’. தேசிய விருது பெற்ற இப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. நவீன்.மு இயக்கத்தில் மணிமேகலை, காளிதாஸ், மதுரை ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜூ முருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எடிட்டர் பிலோமின் ராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது நவீன்.மு பேசுகையில், ‘எனது குறும்படத்துக்கு தேசிய விருது கிடைத்ததில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நடந்தபோது, பலரது ஆசைகள் அந்த மரணத்துடனேயே மரித்துவிட்டது. கதையின் நாயகர் காளிதாஸ், ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறார்.

அவரது ஆசை நிறைவேறியதா என்பது கதை. ஒருவரது மரணம், இன்னொருவருக்கு விடுதலையை கொடுக்கிறது. அந்த அடிப்படையில் இக்கதை அமைந்திருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது யூடியூபில் வரும் 27ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இதில் சிறப்பாக நடித்திருந்த காளிதாஸ் தோழர் தற்போது உயிருடன் இல்லை.

Related Stories: