கன்னடத்தில் ஹீரோயினாகும் ஊர்வசி மகள் தேஜாலட்சுமி

பெங்களூரு: தென்னிந்திய படவுலகில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி. அவரது மகள் தேஜாலட்சுமி மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அடுத்ததாக ‘பாப்லோ பார்ட்டி’ என்ற படத்தில் தாய் ஊர்வசியுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகிறது. இந்நிலையில் ‘புல்லி’ என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் தேஜாலட்சுமி. இதில் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஊர்வசி. மேலும், தாய், மகள் இணைந்து ஒரே கன்னட படத்தில் முதல்முறையாக நடிப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சம். இதில் ஊர்வசி, புவன் பொன்னண்ணாவின் தாயாக நடிக்கிறார். டார்க் காமெடி கதையாக உருவாகும் இப்படத்தை அனுப் ஆண்டனி இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அச்சுத் குமார், ஓம் பிரகாஷ் ராவ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Related Stories: