மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி

 

சென்னை: திரைக்கு வந்த ‘சிங்கம் 2’, ‘சர்தார்’ உள்பட பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ், மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரமாண்டமான ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை தயாரிப்பது குறித்து நேற்று அறிவித்தது. முழுநீள பொழுதுபோக்கு மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட இப்படத்தின் மூலம் முதல்முறையாக கார்த்தி, மோகன் ராஜா இணைந்துள்ளனர். இதுகுறித்து பிரின்ஸ் பிக்சர்ஸ், ‘ஒரு புதிய பயணம் தொடங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரலபமான மோகன் ராஜா, இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் தனது 25வது ஆண்டை வெற்றிகரமாக கொண்டாடுகிறார். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Related Stories: