புராண படத்துக்கு உதவிய மகேஷ் பாபு

அபிஷேக் நாமா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘நாகபந்தம்’. இதன் டீசரை மகேஷ் பாபு வெளியிட்டார். கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள புராண ஆக்‌ஷன் கதை கொண்ட படமான இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஜெகபதி பாபு, ரிஷப் சாவ்னி, கருடா ராம், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி.எஸ்.அவினாஷ் நடித்துள்ளனர். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபே, ஜுனைத் குமார் இசை அமைத்துள்ளனர்.

அப்தாலி தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பால் ஈர்க்கப்பட்ட இக்கதை புராணம், வரலாறு, ஆன்மீக போர் ஆகியவற்றை இணைத்துள்ளது. கலாச்சார எதிர்ப்பு மற்றும் தெய்வீக பாதுகாவலர் சந்திப்பில் நடக்கும் மோதல் வடிவத்தை முன்னிறுத்துகிறது. இதன் மையத்தில் புனிதமான நாகபந்தம் கோயில் இருக்கிறது‌. இது வான சக்திகளால் பண்டைய அண்ட சக்தியை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

இமயமலையின் ரகசிய பாதைகளுக்குள் ஆழமாக அமைந்திருக்கும் இக்கோயில் தவறானவர்களின் கண்களில் படுவது, கற்பனை செய்ய முடியாத பேரழிவை தூண்டும் அளவுக்கு மகத்தான சக்தி கொண்டுள்ளது. பிரம்மா படைப்பில் பிறந்து, விஷ்ணு தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு, மகா தேவ் கோபத்தால் இயக்கப்படுகிறது. தெய்வீகம், விதி, அழிவு ஆகியவை மோதிக்கொள்ளும் படம் இது.

Related Stories: