சென்னை: முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன் வீ.தமிழழகன், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவ வீரன்’, ‘மூன்று முகம்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’, கமல்ஹாசன் நடித்த ‘காக்கி சட்டை’, சிவாஜி கணேசன் மற்றும் சத்யராஜ் நடித்த ‘புதிய வானம்’ உள்பட பல படங்களை தயாரித்துள்ள வீ.தமிழழகன், மறைந்த திவ்யபாரதி நடித்த ‘நிலா பெண்ணே’, சத்யராஜ் நடித்த ‘மந்திரப்புன்னகை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை சென்னையில் நடந்தது. வீ.தமிழழகன் மறைவுக்கு ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் பலர், இரங்கல் செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.
இயக்குனர் வீ.தமிழழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்
- தமிழ்
- ரஜினிகாந்த் துக்கப்படுகிறார்
- சென்னை
- ஆர். எம். வி
- தமிழ்ஜகன்
- ரஜினிகாந்த்
- கமல்ஹாசன்
- சிவாஜி கணேசன்
- சத்யராஜ்
- ஜாகன்
- லேட்
- சத்யராஜ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
