விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சமாதேவி கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக மக்களை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காத்திடும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சீரியமுறையில் முதலமைச்சர் மேற்கொண்டுவருகிறார். அதன்தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் துவங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்மூலம் ரத்தஅழுத்தம் நீரிழிவுநோய் போன்ற தொற்றா நோயுடைய பொதுமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்படஉள்ளது. இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படத்திடவும், கண்காணிக்கவும் பெண்சுகாதார தன்னார்வலர்கள், சுகாதார செவிலியர்கள, சுகாதார ஆய்வாளர், பிசியோதெரபிஸ்ட், நோய்தடுப்புசிகிச்சை செவிலியர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பெரியசெவலைகிராமத்தைச்சேர்ந்த தம்பதியினர் கொரோனாவினால் உயிரிழந்ததைத்தொடர்ந்து, முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான வைப்பீட்டு பத்திரத்தினை, அவர்களது குழந்தைகளுக்காக உறவினர்களிடம் வழங்கினார். ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், திமுக அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், கல்பட்டுராஜா, வளவனூர் நகர செயலாளர் ஜீவா, ஒன்றிய நிர்வாகிகள் மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணைஅமைப்பாளர் பிரியங்கா,கிளை இளைஞரணி புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர் தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.இதில் புகழேந்தி எம்எல்ஏ , முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பன், தியாகதுருகம் தொழில் அதிபரும், திமுக பிரமுகருமான மணிமாறன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கென்னடி, ராமமூர்த்திமற்றும் பலர்  கலந்து கொண்டனர்.    …

The post விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: