கலைஞரின் நினைவு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காக்களூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்து பேசினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு,  கே.ஜெ.ரமேஷ், காயத்திரி ஸ்ரீதரன், மா.ராஜி, ஜி.ஆர்.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.  அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் 7ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப் படத்தைவைத்து அஞ்சலி செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத் உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், நிவாரண உதவி பொருட்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும். ஆட்டோக்களில் இரு வண்ணக் கொடி கட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் திருவுருவ படத்தை வைத்து செய்த சாதனைகளை ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் ஒன்றிய, நகர, பேருர் செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ரவிக்குமார், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, ஜி.ராஜேந்திரன், பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், வக்கீல் எஸ்.மூர்த்தி, தங்கம் முரளி, ஏ.ஜெ.பவுல், த.எத்திராஜ், எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், பா.ச.கமலேஷ், ஜி.விமல்வர்ஷன், வி.ஹரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.’கொரோனா விழிப்புணர்வு’திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு கொரோனா பிரசார வாகனத்தை துவக்கிவைத்தார். பின்னர் வீதி, வீதியாகச் சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயம் அருகே முகக்கவசம் இல்லாமல் இருந்த சாலையோர மக்களுக்கு அமைச்சர் முகக்கவசம் அணிவித்தார். …

The post கலைஞரின் நினைவு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: