திரைக்கு வந்த ‘ரெட் லேபில்’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தவர், லெனின். அவர் கூறுகையில், ‘இப்படத்துக்கு ஐந்து ஹீரோயின்களை பார்த்தேன். பிறகு ஆறாவதாக வந்தவர்தான் அஸ்மின். படத்துக்கு முதலில் ஒரு தலைப்பை பதிவு செய்தேன், கிடைத்தது. பின்பு, ‘அது காலாவதியாகி விட்டது. இல்லை’ என்று சொன்னார்கள். அதை புதுப்பிக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரியாது. ஒரு ஆண்டுக்குள் அதை புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரை கணினி மயமாக்கி இணைத்தால், மிகவும் சுலபமாக இந்த வேலையை செய்து முடிக்க முடியும். பல பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆனால், யாரும் இதை செய்வதில்லை.
நான் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்த பிறகுதான் நடிப்பவர்களை தேர்ந்தெடுத்தேன். நான் சரியாக செயல்பட்டு இருக்கிறேன் என்பதற்கு எனது இசை அமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்ததும், எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்ததும் நிரூபித்துள்ளது. நான் பணம் சம்பாதிக்க வரவில்லை. சினிமாவின் மீதுள்ள காதலால் வந்திருக்கிறேன். கடந்த 2023ல் கதை விவாதத்தில் தொடங்கி, 2026ல் திரைக்கு வரும் தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்துகொண்டே இருந்தன. இதையெல்லாம் கடந்து படம் திரைக்கு வந்துள்ளது என்பதை நினைக்கும்போது, ஏதோ பெரிய சாதனை படைத்தது போல் தோன்றுகிறது’ என்றார்.
