போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம்

சென்னை: ஃபயர் பாக்ஸ் பிலிம் ஹவுஸ் சார்பில் சரணிகா தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. மணிகண்டன் செல்வராஜ் இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இவர், இயக்குனர் அறிவழகனின் உதவியாளர். முக்கிய வேடங்களில் ஆ.வெங்கடேஷ், ‘அருவி’ மதன், தணிகை நடிக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி, அழுத்தமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, ஹரி இசை அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகிறது.

Related Stories: