மூன்று வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் ‘கா’

 

ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, படத்தின் மீதுள்ள பைனான்ஸ் பிரச்னை காரணமாக, ஒவ்வொரு முறையும் படம் வெளியாகாமல் தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்துக்கு விமோசனம் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் 13ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு உறுதி செய்துள்ளது. காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளை போட்டோ எடுக்கும் ஆண்ட்ரியாவுக்கு திடீரென்று காட்டில் பிரச்னை ஏற்படுகிறது.

அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை. ஆக்‌ஷன் நிறைந்த கேரக்டர் என்பதால், நிறைய காட்சிகளில் ஆண்ட்ரியா தனது உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். மற்றும் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரிக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி.பாபு இசை அமைக்க, நாஞ்சில் இயக்கியுள்ளார். கா என்றால் காடு, கானகம் என்று பொருள். பாடல்கள் கிடையாது என்றும், படம் முழுவதும் ஆண்ட்ரியா ஒரே உடையில் வருவார் என்றும் ஏற்கனவே படக்குழு கூறியிருந்தது.

அந்தமான், மேற்குத்தொடர்ச்சி மலை, ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. 2022ல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றாலும், மூன்று வருடங்களுக்கு பிறகே படம் ரிலீசாகிறது.

Related Stories: