கணவன் மது பழக்கத்தால் மனைவி தற்கொலை: மகன் செல்போன் கேமில் மூழ்கியபோது பரிதாபம்

பல்லாவரம்: பம்மல் எம்ஜிஆர் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (38). இவது மனைவி ஜீவா (32). இவர்களுக்கு கவுதம் (13), பிரதாப் (11) என்ற மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வெங்கடேஷ் போதையில் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு தூங்கிவிட்டார். விரக்தியடைந்த ஜீவா, படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அவரது உடல் எடை தாங்காமல் கயிறு அறுந்து கீழே விழுந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த மகன் பிரதாப், தாய் அசைவற்று கிடப்பது குறித்து தந்தையை எழுப்பி கூறியுள்ளார். ஆனால், அவர் போதையில் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. இதையடுத்து, சிறுவன் பிரதாப், அருகில் உள்ள உறவினரிடம் தெரிவித்தான். அவர் வந்துபார்த்தபோது,  ஜீவா இறந்தது தெரிந்தது. மனைவி இறந்தது கூட தெரியாமல், அவரது சடலத்தின் அருகிலேயே கணவன் போதையில் தூங்கியதும் தெரிந்தது. பெற்றோர் அடிக்கடி சண்டை போடுவதை  வழக்கமாக கொண்டிருந்ததால், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது, வீட்டில் இருந்த மகன் பிரதாப் அதை கண்டுகொள்ளாமல் செல்போனில் கேம் விளையாடியுள்ளான். ஒரு கட்டத்தில் செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் வேறு வழியில்லாமல் படுக்கை அறைக்குள் வந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்தததும், தந்தை போதையில் தூங்கியதும் தெரியவந்தது….

The post கணவன் மது பழக்கத்தால் மனைவி தற்கொலை: மகன் செல்போன் கேமில் மூழ்கியபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: