சென்னை: விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சிறுமியாக நடித்தவர் சாரா அர்ஜுன். இப்போது அவருக்கு 20 வயதாகிறது. ‘துரந்தர்’ இந்தி படத்தில் தன்னைவிட 20 வயது மூத்தவரான ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்தார். இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த வயது வித்தியாசம் பற்றி பேசியிருக்கிறார் சாரா அர்ஜுன்.
அவர் கூறியதாவது: கதைக்கு தேவைப்பட்டதால் அப்படியொரு வயது வித்தியாசத்தில் ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். ‘துரந்தர்’ ரிலீஸுக்கு முன்பு நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை. அதனால் வயது வித்தியாசம் குறித்த எந்த பேச்சும் எனக்கு தெரியாது.
அனைவருக்கும் கருத்து இருக்கும். வாழு வாழவிடு என்று நம்பும் ஆள் நான். அது அவர்களின் கருத்து. அதனால் நான் யோசிக்கும் விதம் மாறப்போவது இல்லை. எனக்கு துரந்தர் படக் கதை தெரியும். வயது வித்தியாசம் அதில் பெரிதாக தெரியாது என்பது தெரியும். அவ்வளவு தான். இவ்வாறு சாரா அர்ஜுன் கூறியுள்ளார்.
