தென்காசியில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி

சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று நடந்தது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். விழாவில் அந்தந்த மண்டகபடிதாரர்கள் 50 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. வழிபாடுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 9ம்நாள் நடைபெறும் அம்பாள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. 10ம் நாள் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி கொடுக்கும் வைபவம் தெற்கு ரதவீதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெறும். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை காணிக்கையாக சேர்ப்பார்கள். தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராகவும், இரவு சங்கரலிங்க சுவாமியாக ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் 2ம் தபசு காட்சியும் நடைபெறும்.ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தபசு காட்சிகள் கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி, மண்டகபடிதாரர் மட்டும் பங்கேற்ற நிலையில் நடந்தது. மாலை 6.06 மணிக்கு தவக்கோலத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு சங்கரலிங்கமாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. …

The post தென்காசியில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி appeared first on Dinakaran.

Related Stories: