இந்தியாவின் முதலமைச்சர்களில் ’முதல்’அமைச்சர் மு.க.ஸ்டாலின் : வைரமுத்து வாழ்த்து !!

சென்னை : சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளதற்கு வைரமுத்து வாழ்த்து கூறியுள்ளார்.தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதலே அதிரடிகளுக்கு குறைவில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கியது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில திட்டங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2.5 மாதமாக திமுக ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் கிரவுட் விஸ்டம் கருத்துக் கணிப்பில் சிறந்த முதல்வருக்கான முதலிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டாம் இடத்தையும், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,“இந்தியாவின் முதலமைச்சர்களில்’முதல்’அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றுஆர்மாக்ஸ் மீடியா கணித்திருப்பதுஅவர்தம்ஆட்சித் திறத்திற்குசாட்சியாகும்.முதலமைச்சர் பெருமை சேர்ப்பதுதமிழ்நாட்டுக்கு;இந்தியா பெருமை சேர்ப்பதுமுதலமைச்சருக்கு.தக்கவரின்மிக்க புகழைத்தக்கவைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்….

The post இந்தியாவின் முதலமைச்சர்களில் ’முதல்’அமைச்சர் மு.க.ஸ்டாலின் : வைரமுத்து வாழ்த்து !! appeared first on Dinakaran.

Related Stories: