சென்னை: காதலர் தினத்தை கறுப்பு நாளாக அனுசரித்திருக்கிறார் ஆண்ட்ரியா. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. நடிகைகள் பலரும் இந்த நாளை தங்களது காதலர்களுடனும் சிலர் தங்களது கணவர்களுடனும் கொண்டாடினர். இந்நிலையில் ஹேப்பி டே என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ஹேப்பிக்கும் டேவுக்கும் இடையே கறுப்பு நிற இதயம் எமோஜியை ஆண்ட்ரியா பதிவு செய்திருந்தார். அத்துடன் கறுப்பு உடை அணிந்து அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.