திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி இன்று தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படத்துக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அளித்துள்ளது. எனவே விரைவில் ஒன்றிய குழு தமிழகம் வந்து, கல்லூரிகளை ஆய்வு செய்ய உள்ளது. இதன்பின்னர்தான் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவரும். கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. அப்போது திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் தான், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  மேலும் சென்னை போரூர் ஏரியில் மருத்துக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த ஏரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். …

The post திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: