தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இதற்கு முன்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2018 டிசம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை கொண்டது. கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. வழக்கமான காலத்திலேயே நமக்கு தர வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்குவது இல்லை. வெள்ளக்காலங்களில் நீரை தேக்கிவைக்காத சூழலில் உபரி நீரைத்தான் கர்நாடகம் தருகிறது. மேகதாது அணையை கட்டிவிட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி. கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைத்து வரும் நீர் இந்த புதிய அணையில் தேக்கிவைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு காவிரி வாழ்வுரிமை என்பதால் மேகதாது அணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை கொண்டது என கூறினார். ஜெயக்குமார் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. தமிழக நலன், விவசாயிகள் நலன், டெல்டா நலனுக்கான நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது என கூறினார். கே.எஸ்.அழகிரி தொடர்ந்து பேசிய தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி; கர்நாடகாவில் உற்பத்தியாவதால் காவிரி நீர் அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தமானவை. காவிரியில் கர்நாடகாவுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு தமிழகத்திற்கு உள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் நீதிமன்றம் மூலமாக தீர்வு காண முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். நாகேந்திரன் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன்; தமிழக அரசின் முடிவுக்கு தமிழக பாஜக முழு ஆதரவு அளிக்கும். தமிழக மக்களின் நலன் எதுவோ அதை தான் தமிழக பாஜக பார்க்கும். காவிரி ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என கூறினார். …

The post தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: