மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி

மதுரை:  மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 22 வயதான ரேவதி ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த ரேவதி ஷூ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து ஒலிம்பிக் கனவை அடைந்துள்ளார். சிறுவயதில் பெற்றோரை இழந்த ரேவதி தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கனவை நிறைவேற்றியுள்ளார். ஜுனியர், சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி டோக்கியோ செல்கிறார். 12ஆம் வகுப்பு படித்தபோது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். ஞாயிறன்று நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதனை படைத்துள்ளார். ரேவதியின் திறமையை பார்த்த பயிற்சியாளர் கண்ணன், அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தியுள்ளார்….

The post மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: