அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவக்கம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. அதனை, அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ மரகதம் குமரவேல், நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விவேகானந்தன், கொள்முதல் நிலைய அலுவலர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாக்கம், தண்டலம், கூடலூர், வைப்பனை, தண்டரைபுதுச்சேரி, ஒரத்தூர் உள்பட 21 கிராம விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைவிதத்து அறுவடை செய்த நெற்கள் கொள்முதல் செய்யப்படும். 40 கிலோ மூட்டை நெல் ரூ.760 என தினமும் 800 முதல் 1000 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

The post அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவக்கம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: