யாகூ தேடலில் சமந்தாவுக்கு 10வது இடம்..!

கூகுள் போல இணையதள தேடல் பக்கம் யாகூ. ஒவ்வொரு வருடமும் யாகூ நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் மரணம் அடைந்த பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா முதலிடம் பிடித்துள்ளார். சல்மான்கானுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளவர், பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன்.

சமீபத்தில் மரணம்  அடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. 5வது இடம் திலீப்குமாருக்கு.  இவர்களை தொடர்ந்து சல்மான்கான் மகன் ஆர்யன் கான், நடிகைகள் கத்ரினா கைப், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். இந்த வரிசையி்ல் 10 வது இடத்தை பிடித்துள்ளார் சமந்தா.

Related Stories:

More