சந்திரமுகி 2ல் நடிக்கும் கங்கனா

சென்னை: கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘சந்திர முகி’. இப்படத்தின் 2ம் பாகத்தை பி.வாசு இயக்க, அதில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் படம் உருவாக்கப்படும் என்று பி.வாசு அறிவித்தார். ஆனால், ரஜினிகாந்த் நடிக்கவில்லை. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பாகுபலி1’, ‘பாகுபலி2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளராக இருந்த எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் ஜோதிகாவுடைய கேரக்டர் ரசிகர் களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இப்போது ‘சந்திரமுகி 2’ல் ஜோதிகா கேரக்டரில் கங்கனா ரனவத் நடிக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் வெளியான ‘தாம் தூம்’, ‘தலைவி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் உள்பட பல மொழிகளில் ‘சந்திரமுகி 2’ படம் திரைக்கு வரும் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதி வெளியாகவில்லை….

The post சந்திரமுகி 2ல் நடிக்கும் கங்கனா appeared first on Dinakaran.

Related Stories: