ஓடிடியில் லவ் ஜோடி படம்

கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா, சாயிஷா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தனர். நெருக்கமான லவ் ஜோடியான அவர்கள், சூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது சக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய டெடி என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

காதல் திருமணத்துக்குப் பிறகு ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்துள்ள முதல் படமான இதில் இயக்குனர் மகிழ்திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளனர். இப்படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் வரும் மார்ச் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெடி படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

Related Stories:

>