முழு நீள காதல் கதை

பிச்சைக்காரன், அதன் பிறகு சிவப்பு மஞ்சள் பச்சை படங்களை இயக்கியனார் சசி. இரண்டுமே எமோஷனலுடன் கூடிய ஆக்‌ஷன் படங்கள். அதற்கு முன் இயக்கிய 555, டிஷ்யூம் ஆகியவைும் ஆக்‌ஷன் படங்கள்தான். இப்போது தனது பழைய பாணியில் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம் போல், முழு நீள காதல் கதை படத்தை இயக்க சசி தயாராகிவிட்டாராம். இந்த படத்தில் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடிக்க உள்ளார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு திரைக்கதை எழுதும் பணியில் சசி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் 2 மாதங்களில் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டு, படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories:

More
>