சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இப்போது, சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது.