புதிய பிசினஸ் தொடங்கிய காஜல்

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்ேபாது சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் இந்தியன் 2 மற்றும் ஒரு பேய் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து கிச்சட் என்ற பெயரில் வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்யும். இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.

Related Stories:

>