×

தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2020-2022ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நடந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முரளி ராமநாராயணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று காலை கலைவாணர் அரங்கில் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில் இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், பிலிம் சேம்பர் தலைவர் காட்ரகட்ட பிரசாத், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் கேயார், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Producers Association ,executives ,
× RELATED முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு...