×

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவதூறு: ரூ.500 கோடி கேட்டு நடிகர் அக்‌ஷய் வழக்கு

பீகாரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ரஷித் சித்திக் என்பவர் எப்எப் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், இந்த வழக்கில் முதல்வர் உத்தவ் மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார். சுஷாந்த் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தியை கனடா தப்பி செல்ல முதல்வர் உத்தவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உதவியது நடிகர் அக்‌ஷய் குமார் என தனது யூடியூப் வீடியோவில் செய்தி வெளியிட்டார்.

இதன் மூலம் கடந்த 4 மாதங்களில் ரூ.15 லட்சத்தை சித்திக் யூடியூப் சந்தாதாரர்கள் மூலம் சம்பாதித்துள்ளார் என குற்றம்சாட்டி சுஷாந்த் மரண வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யூடியூப் சேனல் நிர்வாகி சித்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் தனக்கு ரூ.500 கோடி தரவேண்டும் என கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக சித்திக்குக்கு நடிகர் அக்‌ஷய் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Akshay ,death ,Sushant Singh ,
× RELATED இந்தியாவில் மரண ஓலம்: குவியலாக...