×

கொரோனா மீட்பு பணி: சோனு சூட்டுக்கு ஐ.நா விருது

பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான சமுதாய பணிகளை செய்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் அவர்களுக்கு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது அவரது பணிகளில் முக்கியமானதாக இருந்தது. தற்போது கொரோனாவால் கல்வி வாய்ப்பை இழப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சோனு சூட்டின் இந்த பணிகளை பாராட்டும் வகையில் ஐநாவின் சர்வதேச வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சிறந்த மனிதநேய செயல்பாட்டாளர் என்ற விருதை அறிவித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா, ‘சோனுவுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி, அதற்கு தகுதியானவர் அவர். உங்கள் கடவுள் பணியை தொடருங்கள்’ என்று வாழ்த்தி இருக்கிறார். இதற்கு முன் இந்த விருது ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, எம்மா வாட்சன், நடிகர்கள் டேவிட் பெக்காம், லியனார்டோ டிகாப்ரியோ, லியம் நீசன் பெற்றுள்ளனர்.

Tags : Corona ,UN ,
× RELATED கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...