×

சோனு சூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக பண மோசடி

பாலிவுட் நடிகர் சோனு சூட். படங்களில் வில்லனாக நடிக்கும் இவர், கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பணிகள் காரணமாக தற்போது பல தரப்பினராலும் போற்றப்படுகிறார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தன் உதவிகளை கல்வியின் பக்கம் திருப்பி இருக்கிறார். கொரோனா கால வருமான இழப்பால் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவர்களுக்கு உதவ அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சோனு சூட்டிடம் உதவி கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு மோசடி கும்பல் சோனு சூட்டிடம் உதவி பெற்றுத் தருகிறோம். இதற்காக சர்வீஸ் சார்ஜ் 1,700 ரூபாய் முதலில் செலுத்துங்கள் என்று பல லட்சம் ரூபாயை மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளது. இந்த கும்பலை கண்டுபிடித்த சோனு சூட், அதை பற்றி தனது டிவிட்டரில் குறிப்பிட்டு, ‘அப்பாவி மக்களை ஏமாற்றுகிறவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்குள் மோசடியை நிறுத்துங்கள்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சோனு சூட் சார்பில் நடிகர் விஷால் லம்பா மும்பை ஓஷிவாரா போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Tags : Sonu ,
× RELATED வேலூரில் மருத்துவக் கல்லூரியில் இடம்...